நாட்டின மரங்களை பாதுகாக்கும் கோவையின் மரம் நடும் நாயகன்
மரம் நடுவோம் சுவாசத்தை காப்போம்... மரம் நடுவோம் மனிதத்தை காப்போம்... தினம் ஒரு மரம் நடுவோம்... என்ற சிந்தனையோடு வாழ்ந்து வரும் நபர் கோவையைச் சேர்ந்த முனைவர் ம வாசிம் ராஜா இதுவரை 65 ஆயிரம் + மரக்கன்றுகளை நடவு செய்துள்ளார். மற்றும் 100000 லட்சம் மரக்கன்றுகளை திருமண நிகழ்வு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கி உள்ளார். தொடர்ந்து ஒரு லட்சம் விதை பந்துக்கள் இலவசமாக வியாபாரிகளுக்கும் கல்லூரி பள்ளி நிர்வாகத்திற்கும் வழங்கியுள்ளார். மற்றும் நாட்டின மரங்களையும் நாட்டின நாய்களையும் பராமரித்து மருத்துவ உதவிகளையும் பராமரிப்பு செலவுகளையும் செய்து தொடர் கல்வி உதவி மருத்துவ உதவி என பல்வேறு உதவிகளை தொடர்ந்து கோவையில் செய்து வருபவர்.